காங்கேயம் அருகே உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு "மகாத்மியம்" என்னும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தொடக்கமான பெருநடை மற்றும் அகிம்சை முன்னிறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். மேலும் கூத்துப்பட்டறை மற்றும் மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு இசையின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
காந்தி உபயோகப்படுத்திய பொருட்கள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றை மாணவர்கள் பார்வைக்கு வைத்தனர். கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. டிஜிட்டல் சுவரொட்டிகள் தயாரிக்கும் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. காந்தியின் நினைவு வெளிப்படுத்தும் வகையில் காதி பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் எஸ். ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். காங்கேயம் குழுமம் நிறுவனங்களின் தாளாளர் ராமலிங்கம் தலைமை ஏற்றார். முன்னாள் தமிழ் பேராசிரியர் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பேரவையின் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாணவர்களுக்கு காந்தியின் அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் கௌரவ விருந்தினர்கள் லாலா. T. கணேசன் திருப்பூர் மாவட்ட செயலாளர், துரைசாமி நகர வர்த்தக மளிகை சங்க தலைவர் மற்றும் தயாளன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.