திருச்சி விருது பெற்ற ரெயில்வே பொறியாளர்க்கு பாராட்டு
இந்தியாவில் முதல் பயணிகள் ரெயில் இயக்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ரெயில்வே வாரவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டின் 69-ஆவது ரெயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரெயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டுவதற்காக 'அதிவிஷிஷ்ட ரயில் சேவா புரஸ்கார்' என்றும் விருது வழங்கப்படும். இதில் தெற்கு ரெயில்வேயில் இருந்து 8 பணியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு டிச. 21-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்வில் ரெயில்வே அமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவிப்பார். உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகவும், செயல்திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்தமைக்காகவும், பொன்மலை ரெயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம். கோபால்கிருஷ்ணனுக்கு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருது வழங்கினார். அவரை திருச்சி ரெயில்வே நிலையத்தில் மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல்தலைவருமான கே.சி. நீலமேகம், ரெயில்வே சீனியர் பொறியாளர்கள் மோகன்தாஸ், சீனிவாசன், சிந்தாமணி, சஹானா பிரியதர்ஷினி, அபிஷேக் ராகவ், காவ்யா பிரியதர்ஷினி, மோகன், உதயா மற்றும் பொன்மலை ரெயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டினர்.