ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு - கேது எப்போதும் எதிர் திசையில் தான் நகரும். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு ராகுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்படி, ரிஷபம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புத்தாண்டில் பல வருமான ஆதாரங்கள் உருவாகும். ராகுவின் இந்த சஞ்சாரத்தால், தொழில் முன்னேற்றத்துடன், வியாபாரத்தில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும் எனப்படுகிறது.