
மணப்பாறை: பிரிந்து சென்ற மனைவி; இளைஞர் தற்கொலை
மணப்பாறை அருகே உள்ள வெள்ளையகக்கோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக அவருடைய மனைவி கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று வீட்டில் தனியாக இருந்த பிரபு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் அவரது உடலை மீட்ட வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.