தி.மலை சாத்தனூர் அருகே ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய முதலைப் பண்ணை உள்ளது. அணையிலும் ஏராளமான முதலைகள் வசிக்கின்றன. கடந்த 2-ம் தேதி பெய்த மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் 150-க்கும் மேற்பட்ட முதலைகள் அணையில் இருந்தும், அருகில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்தும் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் முதலைகள் தலைகாட்டி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.