திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

திருச்சி விஷம் அருந்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி விஷம் அருந்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமகிரி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது 26 சிறுவயது முதலே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக கடந்த இரண்டாம் தேதி அன்று விஷம் அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மகேஸ்வரனின் தாய் ராணி அளித்த தகவலின் படி வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி
Jan 05, 2025, 16:01 IST/

‘கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ - விஷாலைப் பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்

Jan 05, 2025, 16:01 IST
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் 'மதகதராஜா'. இந்நிலையில், இன்று (ஜன.5) மதகதராஜா படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஷால், மெலிந்த உடல் தோற்றத்தில் வந்தார். தொடர்ந்து, மேடையில் அவர் பேசும்போது கைகள் நடுங்கின, வார்த்தைகள் தடுமாறின. இதனைப் பார்த்த ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். விஷாலுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் சுந்தர்.சி-க்காக நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.