வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, இன்று காலை, வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள ஜெயலலிதா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிறைச்சாலை வளாகத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மழை நீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள சுமார் 50 விடு களுக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒருசில வீடுகளின் சுவர்கள் மழை காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் ஏழை, எளிய மக்கள் வசிக்க வீடு இன்றி தவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்