செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூரில் அருள்மிகு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. அங்கு சென்ற மாற்றுத் திறனாளி சரவணனை, ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு, எட்டி உதைத்துள்ளார். சில நாட்களுக்கு முன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வந்தபோது பூட்டப்பட்டிருந்த கோயிலை திறந்தது குறித்து சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் காரணமாக அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், “நீயெல்லாம் எதற்கு கோயில் உள்ளே வந்தாய்” என சாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது.