டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அறிக்கை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதன், "அரசியல் நடைமுறையை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை. குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகிறது” என விமர்சித்துள்ளார்.