

திருச்சி: ஓய்வூதியர்கள் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பாரம்பரிய பென்ஷன் நடைமுறைகளை மீறி ஓய்வூதிய தேதி அடிப்படையில் பென்சனர்களை பாகுபாடு செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்கும் நிதி சட்ட முன்வடிவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருச்சி பி. எஸ். என். எல் அலுவலகம் முன்பு நேற்று ( ஏப்ரல் 3) ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் ரங்கராஜு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராகவேந்திரன், தொ. மு. ச மாநில செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.