மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் இ-விட்டாரா (e Vitara) எனும் மின்சார கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இது எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் விற்பனைச் செய்யப்பட உள்ள நிலையில் இதன் உற்பத்தி குஜராத் ஆலையில் வைத்தே மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ-விட்டாராவின் விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சத்திற்குள் இருக்கலாம்.