துறையூர் அருகே உள்ள புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் பாறையை வெட்டிக் கற்கள் கடத்தல் நடைபெறுவதாக கரட்டாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி லட்சுமி அளித்த தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு பாறையில் இருந்து வெட்டி கற்களை கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கரட்டாம்பட்டியை சேர்ந்த வரதராஜ் அம்மாபட்டியை சேர்ந்த சுபாஷ் தின்னனூரைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து ஜேசிபி வாகனம் ஒன்றே டிராக்டர் ஒன்றை பறிமுதல் செய்தனர்.