துறையூரில் வாஜ்பாய்க்கு சிலை வைக்க கோரி மனு
பாரதிய ஜனதா கட்சி சார்பில் துறையூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களுடைய சிலை நிறுவ இடம் வழங்கி அனுமதி தர வலியுறுத்தி துறையூர் நகராட்சி ஆணையர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், துறையூர் நகர தலைவர் சரவணன், மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சம்பத்குமார், துறையூர் நகர நிர்வாகிகள் நாகராஜ், மனோகரன், ஹரிஷ், கோகுல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.