துறையூர் பகுதியில் இவ்வளவு மழைப் பதிவா?
துறையூர் அருகே உள்ள பச்சைமலை தென்புறநாடு பகுதியில் நேற்று(நவ.16) முப்பத்தெட்டு மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சைமலை பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாகவே தினமும் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்தது. இதில் 38 மில்லிமீட்டரும் துறையூர் பகுதியில் 6 மில்லிமீட்டரும் கொப்பம்பட்டி பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.