ஜார்ஜியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி 53.93 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாவிட் என்ற தலைவர் திடீரென அனைவர் முன்னிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி மீது கருப்பு மையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.