துறையூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நகராட்சி தயார்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள. நகராட்சி பணியாளர்கள் தயாராக உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ளது. பருவம பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திருச்சி மாவட்ட கலெக்டர் ஆலோசனையின் பேரில் துறையூர் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளான மேட்டுத் தெரு, கீழ குத்தி தெரு, மேல குத்தி தெரு, கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளை கண்டறிந்து திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள், சவுக்கு கழிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புயலினால் பாதிப்படையும் மரங்களை அகற்றி சீர் செய்திட மரங்களை அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள், வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிக்கு ப்ளீச்சிங் பவுடர், வெள்ளப் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற எச். பி ஆயில் இன்ஜின், பொது சுகாதாரம் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர உதவி எண் அழைக்க 04327 222347 கொடுக்கப்பட்டுள்ளது.