தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக பிறந்து, இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக மாறியவர் ஏபிஜே அப்துல் கலாம். விஞ்ஞானியாகவும், அறிவியல் அறிஞராகவும், பேராசிரியராகவும், குடியரசுத் தலைவராகவும் அப்துல் கலாம் இந்தியாவிற்கு செய்த பணிகள் அளப்பரியதாகும். நாட்டை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்தியதில் அவரது பங்கு போற்றத்தக்கது. அவரது 93-வது பிறந்த நாளான இன்று (அக்.15) அவரது நினைவுகளை போற்றுவோம்.