துறையூரில் புரட்டாசி உற்சவம்! பெருமாள் மலையில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமயேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெருமாள் மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 1200 படிக்கட்டுகளின் வழியாகவும் மலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தார் சாலையின் வழியாகவும் சென்று சாமி தரிசனம் செய்தனர் புரட்டாசி உற்சவ விழாவை முன்னிட்டு துறையூர் மட்டும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி பெருமாலை தரிசனம் செய்தனர். புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு இருசக்கர வாகனங்களில் மலை ஏறும் பக்தர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் வாகனங்களில் செல்பவர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி துறையூர் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.