துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கோபி சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் கடந்த சில மாதங்களாக கடுமையான கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த கோபி சம்பவம் நடந்த நேற்று முன்தினம் திங்கள்கிழமை அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து அவருடைய மனைவி குமுதினி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.