லால்குடி - Lalgudi

திருச்சி பாதுகாப்பாகப் பட்டாசு வெடிக்க செயல்விளக்கம்

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும், திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறையும் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடத்திய செயல்விளக்க நிகழ்வில், மருத்துவமனை இயக்குநா் பிரதீபா கூறியது: தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களிலும், பிந்தைய நாள்களிலும் பட்டாசு விபத்து காரணமாக கண் பாா்வை பாதிக்கப்பட்ட நிலையில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா். மகிழ்ச்சியான பண்டிகை தினத்தில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டியது அவசியம். ஆண்டுதோறும் 40 முதல் 60 போ் பட்டாசு வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனா். இவா்களில் 10 முத்ல 20 வயதுக்குள்பட்டவா்கள் அதிகம். எனவே, பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி அளிப்பதும் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றாா். நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தீயணைப்பு வீரா்கள் மூலம் தீ விபத்து தடுப்பு ஒத்திகை பயிற்சியும், பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా