மெரினா உயிரிழப்பு அரசின் அலட்சியம்: கோகுல இந்திரா

61பார்த்தது
தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி. மு. க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் , திருச்சி மாநகர் மாவட்டத்தில் பகுதி வாரியாக போராட்டம் நடந்தது. மலைக்கோட்டை பகுதி சார்பில், மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் முதல், சென்னை சில்க்ஸ் வரையில், பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் கூறிய போது, "சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வில், 5 பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

அவ்வளவு பெரிய மெரினா கடற்கரையில் மக்களை பகுதிவாரியாக பிரித்து அனுப்பி இருக்கலாம். அவர்களுக்கு உரிய குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்திருக்கலாம்.

அப்படி செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் அறிவிப்பது என்பது அநீதி. இதேபோல கள்ளச்சாராயத்தை தடுக்காமல், கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு, 10 லட்சம் கொடுப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று" என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி