திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வருபவர் கிருத்திகா இவருக்கு ஸ்ரீபொன்னையன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அது காதலாக மாறியது. ஸ்ரீ பொன்னையன் அந்த இளம் பெண்ணிடம், தனது சொந்த மாமா அதிமுக முக்கிய பிரமுகர் என்றும்,
திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்றும், இதனால் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். பின்னர்
கர்ப்பத்தை கலைத்துவிடு என கூறி மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் காதலனை நம்பி கர்ப்பத்தை கலைத்து உள்ளார். பின்னர் ஸ்ரீபொன்னையன் முற்றிலுமாக தொடர்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து கிருத்திகா கடந்த செப். 15ல் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தள்ளுபடி ஆன நிலையில் அவரை கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி கூறும் போது, தற்போதைய மத்திய அரசின் பி என் எஸ் எஸ் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், தகாத வார்த்தையால் திட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து காதலனை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.