திருச்சியில் கனமழை பள்ளி செல்லும் குழந்தைகள் அவதி

61பார்த்தது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாநகரப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 8: 30 மணி அளவில் மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, ஜங்ஷன், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மாணவன் பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. இதன் காரணமாக காலையில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் மழையில் நனைந்த படி சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி