ஓட்டப்பிடாரம் - Ottapidaram

தூத்துக்குடி: கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: நாதக கோரிக்கை

தூத்துக்குடி: கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: நாதக கோரிக்கை

ஆலந்தா கிராமத்தில் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்து பணிகளை நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஆலந்தா கிராமத்தில் கல்குவாரி அமைத்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் குடிநீர் பாதிக்கப்படும். ஆலந்தா கிராமமே இல்லாமல் போய்விடும். சிறு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும். விவசாய நிலங்களை குவாரியாக அமைத்து தோண்டும் பட்சத்தில் சுற்றுப்புற விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.  மேலும் குவாரி ஆழம் செல்லும்போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இந்த பகுதியில் இந்த குவாரி அமைக்க கூடாது என சட்டமன்ற உறுப்பினர், எம்.பி, மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்துள்ளோம். இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே கல்குவாரி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தி குவாரியை நிறுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా