திமுக தனது தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறைவைக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை இதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சிதம்பர நகரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அனுமதி இன்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்