தூத்துக்குடி: ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம்: வாகன ஒட்டிகள் அவதி
தூத்துக்குடியிலிருந்து மாப்பிள்ளையூரணி செல்லும் சாலை மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். தூத்துக்குடி அருகே எட்டயபுரம் சாலையில் மாப்பிள்ளையூரணிக்கு செல்லும் முகப்பு பகுதியில் தாா்சாலையானது பெரும் பள்ளமாக கிடக்கிறது. போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில் சாலை மேடு பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு செல்வோர், பணிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருவதால், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.