தூத்துக்குடி: ஸ்டவ் வெடித்து பெண் பலி; பரிதாபம்

76பார்த்தது
தூத்துக்குடி: ஸ்டவ் வெடித்து பெண் பலி; பரிதாபம்
தூத்துக்குடியில் சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஜெயஸ்ரீ (56). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்டவ் வெடித்து சேலையில் தீப்பற்றியுள்ளது. இதில் தீக்காயம் அடைந்த ஜெயஸ்ரீ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி