தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராசு லோடு வேன் டிரைவரான இவர் தனது குடும்பத்தை பிரிந்து வசித்து வந்துள்ளார் மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மந்திர மூர்த்தி என்பவரிடம் சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
வேலைக்கு சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை மேலும் அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது இதைத் தொடர்ந்து ராசுவின் வீட்டு அருகில் அருகில் இருந்தவர்கள் ராசுவின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர் இதன் பேரில் ராசுவின் குடும்பத்தினர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி ராசுவை தேடி வந்தனர்
இதில் ராசுவின் உடல் கோயில் பிள்ளை நகர் எதிரி அமைந்துள்ள ராஜா ஏஜென்சி என்ற ஷிப்பிங் நிறுவனத்தின் பின்புறம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பது தெரியவந்தது
இதை எடுத்து சம்பவ இடத்திற்கு நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான காவல்துறையினர் வருகை தந்து விசாரணை நடத்தி கொலையான டிரைவர் ராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
டிரைவர் ராசு கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது