மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்க்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை கேகே நகரில் உள்ள பிரசாத்தின் வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.