கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது தந்தையை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சொல்பேச்சை கேட்காமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் தனது மகன் ஊர் சுற்றி வந்த நிலையில், அதனை தந்தை கண்டித்துள்ளார். அப்போது தான் திட்டுவதை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை அந்த தந்தை தட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் மகன் தந்தையென்றும் பாராமல் அவரை தாக்கினார். உடன் சேர்ந்து அந்த இளைஞரின் நண்பர்களும் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.