எட்டயபுரம்: காந்தி நினைவு தினம்..தொழுநோய் இல்லாத இந்தியா உறுதியேற்பு

60பார்த்தது
எட்டயபுரம்: காந்தி நினைவு தினம்..தொழுநோய் இல்லாத இந்தியா உறுதியேற்பு
எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று (ஜனவரி 30) தியாகிகள் தினமாகவும், தேசிய தொழுநோய் ஒழிப்புத் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் காந்திஜியின் மாஸ்க் அணிந்து தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிடவும், அகிம்சை வழியை கடைப்பிடித்திடவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி, பணி நிறைவு பெற்ற ஆசிரியர் முத்துசாமி, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், பள்ளி ஆசிரியர்கள் அன்புத்தாய், ஜான்ஸி ராணி, ஜோசப்ராஜா ஆசிரியர், எப்சிபாய் முத்துராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி