தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை பரவலாக மழை பெய்து வருகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், காலங்கரை, ஆத்தூர், திருச்செந்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
இன்றும் மதியம் வரை லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் சுமார் 4மணி நேரம் மழை பெய்யாமல் வெறித்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று மாலை சாரல் மழை தொடர்ந்து பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளி சென்று திரும்பிய மாணவ மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது