கோவில்பட்டி: வியாபாரி உள்ளிட்ட 2 பேருக்கு சரமாரி வெட்டு

77பார்த்தது
கோவில்பட்டி: வியாபாரி உள்ளிட்ட 2 பேருக்கு சரமாரி வெட்டு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 4வது தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகன் (44). காய்கறி வியாபாரி. இவர் பழைய காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார். தற்போது கடைகள் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருவதால், லோரி ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். 

இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பாலு மகன் சங்கரலிங்கம் (48). கூலி தொழிலாளி. இவரது நண்பர் தச்சு தொழிலாளியான சங்கரநாராயணன் மகன் ஜெயபால் என்ற பாலசுப்பிரமணி (42). ஜனவரி 28 இரவு 3 பேரும் தெற்கு பஜாரில் உள்ள ஒரு கடையின் மாடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பாலசுப்பிரமணி மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற சங்கரலிங்கத்தையும் அவர் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதில் காயம் அடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முருகன் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வியாபாரி உள்ளிட்ட 2 பேரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய பாலசுப்பிரமணியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி