குறிப்பிட்ட நேரம் மட்டும் சாப்பிட்டு, மற்ற நேரத்தில் உணவருந்தாமல் இருப்பது இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் எனப்படுகிறது. ஒருவர் ஒரு நாளின் கடைசி உணவை மாலை 5:30 மணிக்கு முடித்துவிட்டு, அடுத்த நாள் உணவை மறுநாள் காலை 10 மணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகி, வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்பு கரையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த முறை விரதத்தை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.