மன்னார்குடியில் ஒருமணி நேரத்திர்க்கும் மேலாக கனமழை
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சம்பா பயிர்களுக்கு உகந்த மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மன்னார்குடி காரக்கோட்டை மேல நெம்மேலி, கோட்டூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.