சீர்காழியில் சட்ட விரோதமாக நடைபெற்ற மது விற்பனை
தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு மதுபான கடைகள் மதியம் 12 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இயங்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் அரசு மதுபான கடை அருகில் இயங்கி வரும் பார் ஒன்றில் நேற்று(அக்.31) அதிகாலை 3 மணியிலிருந்து மதுபான விற்பனை அதிகமாக நடைபெற்றது. இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.