மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 19வது மற்றும் இருபதாவது வார்டுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை பழுதடைந்து காணப்படுகிறது.
பழுதடைந்த சாலைகளை சரி செய்து புதிய சாலைகளை அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், மழைக்காலங்களில் சேதமடைந்த சாலைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.