

மயிலாடுதுறை: நகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சியில் 36-வது வார்டு பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற உறுப்பினர் செந்தில் இரண்டு மாதம் முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நகர்மன்ற தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வரும் 13ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.