மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.