மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையை மேற்கொண்டனர். பிற்பகல் 03: 30 மணிக்கு தொடங்கி இந்த சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இரவிலும் சோதனை தொடர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் கணக்கில் வராத 22 ஆயிரத்து 700 ரூபாய் தொகையை பறிமுதல் செய்தனர்.