மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் வகுப்பறை கட்டிடம் ஒன்றில் மிகப்பெரிய அளவிலான வேப்பமரம் ஒன்று சாய்ந்த வண்ணம் உள்ளது.
இதனால் பள்ளி கட்டிடம் எரியும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் வேப்பமரத்தை உடனடியாக வெட்டி அகற்றிட வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.