கோயிலில் திருடியவா் கைது

75பார்த்தது
மயிலாடுதுறை அருகே கோயில் விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1 கிராம் நகையை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை சேந்தங்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பசுபதீஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு அா்ச்சகராக பணியாற்றும் திவாகா் பூஜைகளை முடித்துவிட்டு, கோயிலை பூட்டிவிட்டு வீடு திரும்பினாா்.

கோயிலுக்கு சென்று பாா்த்தபோது, அம்பாளுக்கு அணிவித்திருந்த ஒரு கிராம் எடை கொண்ட தங்கத்தாலான பொட்டு காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அதில், செவ்வாய்க்கிழமை காலை மா்ம நபா் ஒருவா் கோயிலுக்குள் வந்து சென்றது தெரியவந்தது. விசாரணையில் கோயிலுக்குள் சென்று நகையை திருடியது மயிலாடுதுறை கூைாடு பசுபதி தெருவை சோ்ந்த சிவக்குமாா் (56) என்பது தெரியவந்தது. சிவக்குமாரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து தங்க பொட்டை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி