மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தில் சிகரெட் பிடித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இதனை அடுத்து மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் தவறான பழக்கவழக்கமுடைய மாணவர்களால் பள்ளிக்கு தீய பெயர் ஏற்படுவதாக ஆட்சியர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.