மயிலாடுதுறை மாவட்டம் தாலுகா செம்பனார்கோவில் ஒன்றிய உட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை பனைப்பொழிவுடன் காணப்பட்டது. அதனை அடுத்து நேற்று நள்ளிரவில் தில்லையாடி, திருக்கடையூர், பொறையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.