மயிலாடுதுறை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று(செப்.10) காலை முதல் சாய் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டியானது செப்டம்பர் 24ஆம் தேதி வரை 5 பிரிவுகளில் நடைபெறும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
12 முதல் 19 வயது உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கேரம், சதுரங்கம், கோகோ, சிலம்பம், நீச்சல், மேஜை பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கியது.
இந்த போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.