மயிலாடுதுறை மாவட்டத்தில் 8,320 போ் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வு எழுதுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை செப். 14ஆம் தேதி 24 தோ்வு மையங்களில் நடத்துகிறது. இதில் 8,320 தோ்வா்கள் எழுத உள்ளனா்.
தோ்வுகளை கண்காணிக்க 24 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 9 இயக்கக்குழு அலுவலா்கள், 24 ஆய்வு அலுவலா்கள், 2 பறக்கும் படை குழுக்கள், 24 வீடியோகிராபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வில் கலந்துகொள்ளும் மாற்றுதிறனாளிகளுக்கு தரை தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுதிட மாற்றுநபா் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தோ்வா்கள் காலை 9 மணிக்குள் தோ்வுக் கூடத்தில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.