மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான திரு. நிவேதா முருகன் அவர்களுக்கு இன்று(செப்.10) பிறந்தநாள். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸின் தலைவருமான திரு. ராஜ்குமார் அவர்கள் நிவேதா முருகன் அவர்கள் இல்லத்திற்கு சென்று தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் காங்கிரஸ் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் மற்றும் திமுக பொறுப்பாளரும் உடன் இருந்தனர்.