மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

64பார்த்தது
திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை ஒன்பது மணிக்கு வந்து சேரும் ரயில் இன்று மட்டும் குத்தாலத்துடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பகல் 12 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் குற்றாலத்தில் இருந்து இன்று புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார்குடியில் இருந்து காலை 8: 20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் முறையில் மற்றும் மாலை 05: 15 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து மன்னார்குடி செல்லும் ரயில் ஆகியவை நாளை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூரில் இருந்து காலை 08: 15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி