மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வந்து செல்லும்போது மக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லாததால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.