அமைச்சர் நாசர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்

58பார்த்தது
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. திருத்தணியில் நேற்று இரவு 7 சென்டிமீட்டர் மழை பதிவானதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் சார்பில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு  அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தணி நகராட்சிக்குட்பட்ட குமாரகுப்பம், திருத்தணி ஒன்றியம் செருக்கனூர் ஊராட்சியில் உள்ள பங்களாமேடு, ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அமைச்சர் சாமு நாசர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் நேரில் சென்று முகங்களை பார்வையிட்டு அங்கு தங்க  வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு குடிநீர் பாய் போர்வை பால் ரொட்டி வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி